Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஓய்வெடுக்க சென்ற வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தானப்பநாயகர் தெருவில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ரேகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செந்தில் தனது மனைவியுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் பாதிப்பு ஏற்பட்டதனால் அருகில் இருக்கின்ற ரேகாவின் அண்ணி வீட்டில் ஓய்வு எடுக்கப் போவதாகக் கூறி சென்றுள்ளார். ஆனால் நெடுநேரமாகியும் அவர் வீட்டுக்குத் திரும்பி வராத காரணத்தினால் சந்தேகமடைந்த ரேகா உறவினர் வீட்டுக்கு சென்று பார்த்த போது வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்தது.

அதன்பின் ஜன்னல் வழியாக ரேகா பார்த்த போது மின்விசிறியில் செந்தில் தூக்கிட்டு தற்கொலை செய்வதைக் கண்டு கதறி அழுதுள்ளார். பின்னர் ரேகாவின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து செந்திலை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்குள் செந்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து ரேகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |