Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்னால தாங்க முடியல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆண்டாள் நகர்ப்பகுதியில் சுகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதினால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இதனால் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சுகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |