வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகுட்டை பகுதியில் கோவர்த்தனன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டப் படிப்பை முடித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் தனியாக இருந்த போது திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபரின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.