Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மகனை திட்டிய தந்தை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தந்தை கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்ணடி குப்பம் பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஷூ கம்பெனியில் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அஜித்குமாரின் தந்தை அவரை வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தது குறித்து கேள்வி கேட்டுள்ளார்.

அப்போது வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றி வந்தால் எப்படி குடும்பம் நடத்த முடியும் என கேட்டதால் மன உளைச்சலில் இருந்த அஜித்குமார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஜித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |