குடும்ப தகராறில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெடும்புலி கிராமம் பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சத்யராஜ் மதுபோதையில் வீட்டிற்கு வந்ததால் மனைவி எழிலரசி கண்டித்துள்ளார். இதன் காரணத்தினால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சத்யராஜ் தனது தந்தை இறந்து விட்டதாகவும், அதனால் நான் சாகப் போகிறேன் எனவும் கூறி விட்டு படுக்கை அறைக்கு சென்று கதவை பூட்டி உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த எழிலரசி கதவை தட்டியும் திறக்காததால் தன்னுடைய தந்தையை செல்போனின் மூலம் அழைத்துள்ளார்.
இதை அறிந்த எழிலரசியின் தந்தை மகள் வீட்டிற்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சத்யராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை அடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சத்தியமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.