வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காமராஜபுரம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பழனிவேல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பழனிவேல் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த பழனி வேலை தந்தை திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த பழனிவேல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனிவேலனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.