காசு கேட்டு மனைவியை அடித்த கணவனை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள வை.புதூர் நடுத்தெரு பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகுசெல்வி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இளையராஜா செலவிற்கு தனது மனைவியிடம் பணம் கேட்ட போது அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த இளையராஜா தனது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இது பற்றி அழகுசெல்வி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இளையராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.