மன உளைச்சலால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழைய சிறுவங்கூர் கிராமத்தில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே கிராமத்தில் வசிக்கும் பெண்ணை ஏமாற்றியதாக விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பினர் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு மதியழகனை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு அவர் விஷம் குடித்து விட்டு அதை முகநூலில் பதிவிட்டு மயங்கி விழுந்ததாக தெரியவந்துள்ளது. இதனை அறிந்து வந்த அவரது உறவினர்கள் மதியழகனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மதியழகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.