Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வாழ்க்கையே வெறுத்துப் போச்சு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோதனை குடும்பத்தினர்….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் தெருவில் லாலுபிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூருவில் இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதுபற்றி இவரது சகோதரர் கேட்டுள்ளார்.

அதன்பின் வீட்டை விட்டு வெளியே சென்ற லாலுபிரசாத் மன உளைச்சலில் விஷம் குடித்து விட்டு வீட்டின் முன்பாக மயங்கிக் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |