வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள புதுக்குப்பம் பகுதியில் அருளப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இதுபற்றி அறிந்ததும் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அருளப்பனை கண்டித்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த அருளப்பன் திடீரென தனது வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கீழே கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அருளப்பன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.