Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அதுக்காக இப்படி பண்ணலாமா” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

குடும்பத்தகராறு காரணமாக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெருமாள் தேவி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த குமார் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி குமார்  பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சுத்தமல்லி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |