வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் அன்பரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் அன்பரசு சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார். ஆனால் சமீப காலமாக தொழிலில் சரியான லாபம் இல்லாததால் அன்பரசு மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 5-ஆம் தேதி அன்பரசு விஷம் குடித்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அன்பரசு பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.