Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கஞ்சா விற்பனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. ஆட்சியரின் உத்தரவு….!!

சிறையிலிருக்கும் குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்குமாறு காவல்துறை சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். அதன்படி அப்பகுதியில் துணை காவல்துறை சூப்பிரண்டு பிரபு தலைமையில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஆற்காடு வேல்முருகேசன் தெருவில் வசிக்கும் சதீஷ் என்பவரை கஞ்சாவோடு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து சதீஷை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |