Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கொடுத்த கடனை கேட்ட வாலிபர்…. கடை உரிமையாளரின் கொடூர செயல்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

கொடுத்த கடனை திருப்பி கேட்ட வாலிபரை தாக்கியதால் சிக்கன் கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாறையூர் பகுதியில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பாலு என்பவர் பச்சூர் பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகின்றார். அதன்பின் பாலுவிடம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக தமிழரசன் 60 ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து கொடுத்த கடனை கேட்பதற்காக பாலுவின் சிக்கன் கடைக்கு சென்று பணத்தை தமிழரசன் திருப்பி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு பாலு தமிழரசனை பணம் கேட்டு தொல்லை கொடுத்து வருகிறாய் என ஆபாசமாக பேசி மிரட்டி உள்ளார். இதில் கோபமடைந்த பாலு தன் கையில் வைத்திருந்த இரும்பு ஜல்லி கரண்டியால் தமிழரசனை தலை உள்ளிட்ட பல இடங்களில் தாக்கியுள்ளார்.

பின்னர் படுகாயமடைந்த தமிழரசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து தமிழரசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலுவை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |