தொழிலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வாலிபரை வழிமறித்து சரமாரியாக தாக்கிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்துவருகிறார். இவர் ஆனந்தன் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான பொருள்களை விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தன்பால்நல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிட பணிக்கு தேவையான பொருள்களை விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியில் வசிக்கும் அரவிந்தன், மணிமாறன், ஜெகநாதன் ஆகியோர் ஆனந்தனிடம் தனியார் கட்டிட தொழிலுக்கு தேவையான பொருட்களை நாங்கள் தான் விற்பனை செய்வோம் நீ விற்பனை செய்யக்கூடாது என அடிக்கடி மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் தனியாக சென்று கொண்டிருந்த ஆனந்தனை வழிமறித்த மணிமாறன், ஜெகநாதன், அரவிந்தன் போன்றோர் உன்னை கொன்று விடுவோம் என்று கூறி சரமாரியாக அவரை தாக்கியுள்ளனர். இதுபற்றி ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் ஆனந்தன் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அரவிந்த், மணிமாறணை கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள ஜெகநாதனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.