வாலிபரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தேவேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தேவேந்திரன் வீட்டின் மாடியில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தேவேந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி இது தொடர்பாக காவல்துறை உதவி கமிஷனர் ரவி மேற்பார்வையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மண்ணிவாக்கம் அருகாமையில் கொலையாளிகள் பதுங்கி இருப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் அங்கு பதுங்கியிருந்த 5 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் தான் குற்றவாளியான சுதாகர், சுரேந்தர், சதீஷ், அன்சாரி, விக்னேஷ், ஆகிய 5 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த இரும்பு ராடு மற்றும் கத்தி ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.