Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உணவு வாங்குவதற்காக சென்ற டிரைவர்…. வழிமறித்த 3 பேர்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

லாரி டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெரியசாமி என்ற லாரி டிரைவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் இருந்து தென்காசிக்கு லாரியில் சீனி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அவர் மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருகில் சென்றுகொண்டிருக்கும் போது லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு ஒரு ஹோட்டலில் உணவு வாங்குவதற்காக சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பெரியசாமியை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 12000 ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து லாரி டிரைவர் பெரியசாமி அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பெரியசாமியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சின்னமருது, கோபிநாத், ராகவன் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் பெரிய சாமியிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்போன் மற்றும் 12000 ரூபாய் பணம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |