Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனியில் தொடர் வழிப்பறி – சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் அச்சம்..

தேனி மாவட்டத்தில்  சுற்றுலா பயணிகளை குறிவைத்து அரங்கேறும் தொடர் வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் மற்றும் அவ்வழியாக கேரளா செல்லும் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள அட்டப்பள்ளத்தை  சேர்ந்த மூன்று சுற்றுலா பயணிகளுக்கு மதுபானம் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று, மர்ம நபர்கள் சிலர் கழுத்தில் அரிவாள் வைத்து மிரட்டி அவர்களது உடமைகளை பறித்து சென்றனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அகமது ரஃபிக், ராஜேந்திரன், அஜித் குமார் மாற்று சுகந்த் ஆகிய 4 பேரை கைது செய்ததோடு தலைமறைவாக உள்ள பிரேம், செய்யது முஹம்மது ஆகியோரை தேடி வருகின்றனர்.

இதுபோன்ற தொடர் வழிப்பறி  காரணமாக தேனி மாவட்டம் வழியாக மூணாறு, தேக்கடி போன்ற போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும்  தமிழகத்திற்கு வரும் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |