சாலையில் செல்பவர்களிடம் வழிப்பறி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள பால கிருஷ்ணாபுரத்தில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் முள்ளிப்பள்ளம் அருகாமையில் நின்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த வாலிபர் இவரிடம் இருந்த 300 ரூபாய் மற்றும் செல்போனை வழிப்பறி செய்து தப்பி ஓடியுள்ளனர். இது தொடர்பாக குருசாமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் எம். புதுப்பட்டியில் வசிக்கும் ராஜ்குமார் என்பதும், இவர் தான் வழிப்பறியில் ஈடுபட்டவர் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜ்குமாரை கைது செய்துள்ளனர்.