கூலித் தொழிலாளியை தாக்கி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மகேந்திரவாடி கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவருக்கு ரமணி என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் பாலாஜி அவரது மனைவி ரமணியிடம் பணம் கொடுப்பதற்காக மகேந்திரவாடியிலிருந்து இருசக்கர வாகனத்தில் அரக்கோணம் நோக்கி சென்றுள்ளார். அப்போது பேருந்து நிலையம் அருகில் சென்ற போது திடீரென 3 நபர்கள் பாலாஜியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கேட்டுள்ளனர்.
ஆனால் பாலாஜி பணம் தர மறுத்ததால் அவரின் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த 1000 ரூபாயை அவர்கள் பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். இது பற்றி தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சுபாஷ் உள்பட 3 பேர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுபாஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மற்ற 2 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.