Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கொஞ்சம் லிப்ட் தாங்க” உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் பக்கீர் முகைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்துல் காதர் என்ற மகன் உள்ளார். இவர் திருச்செந்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் காயல்பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வீரபாண்டியன்பட்டினம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஒரு சிறுவன் உள்பட 2 பேர் அப்துல் காதரை வழிமறித்து லிப்ட் கேட்டுள்ளனர். இதனால் அப்துல் காதர் 2 பேரையும் தனது வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சிறிது தூரம் சென்றதும் அந்த 2 பேரும் அப்துல் காதரை வண்டியை நிறுத்த சொல்லி இறங்கி அவரை மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.

அதற்கு அப்துல் காதர் பணம் தர மறுத்ததால் 2 பேரும் பீர் பாட்டிலால் தலையில் தாக்கி விட்டு அவரிடமிருந்த செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரத்து 620-பணத்தையும் பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து அப்துல் காதர் அளித்துள்ள புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது அருணாச்சலபுரம் பகுதியில் வசிக்கும் திருமூர்த்தி மற்றும் 17 வயது சிறுவன் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு அவரிடமிருந்த செல்போன் மற்றும் ரூ. 1900-யும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |