பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சிறப்பு விருந்தினராக வெளியேறிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர் . இன்று வெளியான முதல் புரோமோவில் ஸ்டோர் ரூமில் ரகசியமாக சிவானி வீட்டிற்குள் அனுப்பப்படுகிறார் . அவரைப் பார்த்த மற்ற போட்டியாளர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து அவரை கட்டியணைத்து வரவேற்கின்றனர். அவரின் வருகையை அறிந்த பாலா ஆவலுடன் ஓடி வந்து பேச முயற்சிக்கிறார் ஆனால் சிவானி அவரை கண்டுகொள்ளவில்லை.
#Day103 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/3RRDzc56ER
— Vijay Television (@vijaytelevision) January 15, 2021
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் சிவானி, ரேகா, வேல்முருகன், சனம் ஆகியோர் பேசிக் கொண்டிருக்க வழிய வந்த பாலா சிவானியடம் பேச முயற்சிக்கிறார் . அப்போது சிவானி பாலாவிடம் நலம் விசாரிக்கிறார் . இதையடுத்து சிவானி ஏன் டல்லாக இருக்கிறாய் ?என்று கேட்க அதெல்லாம் இல்லை என்கிறார் பாலா . இதையடுத்து நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன் என்று கூறிவிட்டு பாலாவின் பதிலைக் கூட எதிர் பார்க்காமல் விலகி நடக்கிறார் சிவானி . இதிலிருந்து வெளியே சென்று வந்த ஷிவானி பாலாஜியை ஒதுக்குவதாக தெரிகிறது .