அமீரகத்தின் பிரதமர் கற்றுக்கொண்ட வாழ்க்கைப்பாடம் பற்றி ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
அமீரக துணை அதிபரும் பிரதமருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தனது டுவிட்டர் பக்கத்தில் கல்வி கலாச்சாரம் மற்றும் அறிவு மேம்பாடு போன்றவை ஒரு மனிதனை அனைத்து வகையிலும் சிறந்தவனாகாவும் நல்ல ஒழுக்கத்துடன் மேம்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த பண்புகளால் ஒரு மனிதனை மற்றவர்களிடமிருந்து எந்த விதத்திலும் மற்றும் சமயங்கள் போன்ற எத்தகைய பிரிவிலும் வேறுபடுத்திக் காட்ட இயலாது. இந்தப் பாடத்தை எனக்கு வாழ்கை கற்றுக் கொடுத்தாக கூறியுள்ளார். மனிதாபிமானம் அடிப்படையில் சமூக முகத்துக்கு தேவையான கடமையை செய்து வர முடியும் என்றும் பதிவிட்டுள்ளார்.