சுவையான வல்லாரை முந்திரி சாதம் செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
ஒரு கப் வல்லாரை,
ஐந்திலிருந்து ஆறு முந்திரி,
பச்சை மிளகாய் 2 ,
நெய் தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு கப்பில் கீரையை நன்கு கழுவி எடுத்துக்கொண்டு, அத்துடன் 5லிருந்து 6 முந்திரியையும் 2 பச்சை மிளகாயையும் எடுத்து நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் 2 மேசைக்கரண்டி நெய் விட்டு அதில் கடுகு உளுந்து சேர்த்து தாளித்து பின் அரைத்து வைத்த கலவையை நன்கு வதக்கவும். அதனுடன் சேர்த்து வதக்கிய பிறகு ஒரு கப் சுடுசோற்றை போட்டு கிளறினால் சுவையான முந்திரி சாதம் ரெடி.