Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகளின் வருகை…. கடுமையான போக்குவரத்து நெரிசல்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால் அவர்கள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இந்நிலையில் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்துகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும், வாகனங்களை நிறுத்துவதற்கு இட வசதி செய்து தரவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |