Categories
சினிமா தமிழ் சினிமா

இளைய தளபதியின் அடுத்த படம்…? வாழ்த்துக்குரிய பாடகர்…. அனுபவம் பகிர்ந்த இயக்குனர்…!!

இளையதளபதி விஜயின் அடுத்த படமானது இயக்குனர் வம்சி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் நீங்காமல் இருப்பவர் இளைய தளபதி விஜய். இவர் இயக்குனர் நெல்சன் உருவாக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான first look மற்றும் second look போஸ்டர்கள் இளைய தளபதி பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் காட்சிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதனை அடுத்து படத்தின் பாடல் காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து இளைய தளபதி விஜய் அவர்கள் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தயாரிப்பாளரான ராஜு அவர்களின் பிரம்மாண்ட படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனை உறுதி செய்யும் வகையில் இயக்குனர் வம்சி பிறந்தநாளன்று பாடகர் கிரிஷ் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் விஜய் உடன் இணைந்து பணிபுரியும் அனுபவத்தையும் இயக்குனர் வம்சி பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |