Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

லாரியை முந்தி செல்ல முயற்சி…. படுகாயமடைந்த 21 பேர்…. திருச்சியில் கோர விபத்து…!!

கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்ற போது வேன் விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூர் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் தான்தோன்றி மலையில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு வேனில் சென்றுள்ளார். இந்த வேனை அலெக்ஸ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் முக்கொம்பு பகுதியில் வைத்து முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை அலெக்ஸ் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த அரசு பேருந்து வேன் மீது பலமாக மோதிவிட்டது.

மேலும் கண்டெய்னர் லாரியும் வேன் மீது மோதி விட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த மாரியப்பன், சரண்யா, கௌரி, பாலாஜி உட்பட 21 பேரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |