கோவை அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த வேன் டிரைவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம் ராமபுரம் பகுதியை அடுத்த கணேசபுரம் ஏரியாவில் வசித்து வந்தவர் அருண்குமார். இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரின் தந்தைக்கும் இடையே நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டது.
இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு மனைவி வீட்டிற்கு அருண்குமார் அடிக்கடி சென்று வந்துள்ளார். ஒருநாள் மாணவி தனியாக இருப்பதை பயன்படுத்தி அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவிக்கவே, இதை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி சென்றுவிட்டார்.
இதில் அச்சம் அடைந்த மாணவி யாரிடமும் இதுகுறித்து கூறவில்லை. இதை பயன்படுத்திக்கொண்டு அருண்குமார் பலமுறை மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அழைத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூற அவர்கள் சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
பின் இந்த வழக்கானது கோயம்புத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட அருண்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.