வேன் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவஸ்தான பள்ளி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு புனிதா என்ற மனைவி உள்ளார். இவர் அங்கன்வாடி பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு அறைக்குள் தூங்க சென்ற சண்முகம் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த புனிதா அறைக்குள் சென்று பார்த்துள்ளார்.
அப்போது சண்முகம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த உத்தனப்பள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சண்முகம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.