வேன் கண்ணாடியை உடைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணப்படை வீடு பகுதியில் இருதயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு வேனை நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த பொட்டல் பகுதியில் வசிக்கும் வேல்முருகன் என்பவர் இருதயராஜ் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த வேனின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து இருதயராஜ் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேல்முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.