Categories
தேசிய செய்திகள்

வேன் & லாரி நேருக்கு நேர் மோதல்…. 14 பேர் பலி…. ஆந்திராவில் மீண்டும் பயங்கரம்…!!

வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்திலுள்ள கர்நூல் என்ற மாவட்டம் ராதாபுரம் அருகே வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளது. இந்த கோர விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே ஆந்திராவில் இரண்டு நாட்களுக்கு முன்பு பேருந்து ஒன்று 200 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து தற்போது நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |