Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய வேன்…. சேதமடைந்த கோவில்…. திருப்பூரில் பரபரப்பு….!!

வேன் எதிர்பாராதவிதமாக கோவிலில் மோதியதில் முற்றிலும் இடிந்து சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வலையபாளையம் பகுதியில் 150 ஆண்டுகள் பழமையான சுயம்பு பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிந்தாமணிப்பாளையம், போலநாயக்கன்பாளையம், நட்டுக்கொட்டையான்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பங்குனி மாதங்களில் பொங்கல் வைத்து கிடாய் வெட்டி திருவிழா நடத்தி வருகின்றனர். இதனையடுத்து கோபி பிரதான சாலையில் கோவில் அமைந்துள்ளதால் அந்த வழியில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அம்மனை காவல் தெய்வமாக வழிபட்டு செல்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று சேவூர், போத்தம்பாளையம் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் வாடகை ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்து சிறப்பு வழிபாடும் செய்து வருகின்றனர். இந்நிலையில் போத்தம்பாளையம் பகுதிக்கு சென்ற சுற்றுலா வலையபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் இருந்த பகவதி அம்மன் கோவிலில் வேன் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் டிரைவர் அன்பரசன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனைத்தொடர்ந்து பகவதி அம்மன் கோவில் இந்த விபத்தில் முற்றிலும் இடிந்து நாசமானது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சேவூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |