வேன் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளை தாவீது நகர்ப்பகுதியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆத்தி கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் தனித்தனியாக மோட்டார் சைக்கிளில் சாயர் புரத்திலிருந்து பண்ணைவிளை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நட்டாத்தி பெட்ரோல் பங்க் அருகில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த வேன் ஆத்தி கிருஷ்ணன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ஆத்தி கிருஷ்ணனை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஆத்தி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சாயர்புரம் காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரான ஆழ்வார்திருநகரி பகுதியில் வசிக்கும் பத்திரகாளி என்பவரை கைது செய்துள்ளனர்.