Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேட்டையாடப்படும் விலங்குகள்…. அழிக்கப்பட்ட உடற்பாகங்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

பல நாட்களாக பாதுகாத்து வைத்திருந்த வன விலங்குகளின் உடற்பாகங்களை வனத்துறையினர் அழித்து விட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், தேவாலா, சேரம்பாடி போன்ற பகுதிகளில் வனவிலங்குகளை மர்மநபர்கள் வேட்டையாடுகின்றனர். இதுகுறித்த தகவலின் படி வனத்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வன விலங்குகளின் உடற் பாகங்களை பறிமுதல் செய்து பாதுகாத்து வந்துள்ளனர். மேலும் இயற்கையாக உயிரிழக்கும் வன விலங்குகளின் உடல் பாகங்களையும் வனத்துறையினர் பத்திரமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் வனத்துறையினர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சேகரிக்கப்பட்ட வன விலங்குகளின் உடற் பாகங்களை தீ வைத்து எரித்துள்ளனர். இதில் காட்டு யானைகளின் தந்தங்கள், புலி நகங்கள், மான்கொம்பு, பற்கள் போன்றவை அடங்கும்.

Categories

Tech |