தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் என்ற பகுதியில் திடீரென வனப்பகுதியில் இருந்து ஒரு சிறுத்தை வெளியேறி வந்தது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பெரும்பாலான யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றது. இதில் சத்தியமங்கலம் வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் உணவு தேடி வன விலங்குகள் அடிக்கடி இந்த சாலையை கடந்து செல்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக கரும்புக்காக யானைகள் சாலையோரம் முகாமிட்டு இருக்கும். இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக சென்று வருவார்கள்.
இந்நிலையில் ஆசனூர்அடுத்த தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் என்ற பகுதியில் வழக்கம்போல் வாகனங்கள் வந்து சென்றது. அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து ஒரு சிறுத்தை வெளியேறி வந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் தங்களது வண்டிகளை அப்படியே நிறுத்திக் கொண்டனர். இதனையடுத்து வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை சாலையை கடந்து சென்றது. அந்த சிறுத்தையை வாகனத்தில் இருந்த சில பேர் போட்டோ எடுத்தனர். அதன்பின் சிறிது நேரம் சாலையில் நின்று கொண்டிருந்த சிறுத்தை பின் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனைதொடர்ந்து வாகன ஓட்டிகள் அங்கிருந்து சென்றனர்.