வனப்பகுதிக்கு தொடர்ந்து தீ வைக்கும் மர்ம நபர் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நெக்னாமலை வாணியம்பாடியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதில் ஊராட்சி மலை கிராமம் அமைந்துள்ளது. இந்நிலையில் இக்காட்டின் வழியாக மலை கிராமங்களுக்கு செல்பவர்களும், வனப்பகுதியில் ஆடு மற்றும் மாடுகள் மேய்ச்சலுக்கு அழைத்து செல்பவர்கள் உள்ளனர். அப்போது காட்டு பகுதிக்கு மர்ம நபர்கள் திடீரென தீ வைத்துள்ளனர்.
இதனால் தீ மளமளவென பரவி காடுகள் முழுவதும் பற்றி எரிய தொடங்கி உள்ளது. அப்போது மேய்ச்சலுக்கு அனுப்பப்பட்ட ஆடு மற்றும் மாடுகள் மீண்டும் வீடு திரும்பாமல் காட்டுப்பகுதியில் உள்ளதால் அவைகளும் தீயில் சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனை அடுத்து மலை அடிவாரப் பகுதியில் ஏராளமான பொதுமக்களை அழைத்து வனத்துறை அதிகாரிகள் காடுகளுக்கு தீ வைத்தவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் இதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.