Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஏய் காட்டுக்குள்ள போ இங்கலாம் வரக்கூடாது”… வனத்துறை ஊழியரின் பேச்சை கேட்டு… திரும்பி சென்ற காட்டு யானை…!!

குடியிருப்புக்குள் புகுந்த யானை வனத்துறை ஊழியரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு வனப்பகுதிக்குள் திரும்பி செல்லும் காட்சி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் உள்ள வால்பாறை பகுதியில் சிறுத்தை, யானை, காட்டு மாடு,கரடி  என அதிக அளவில் வனவிலங்குகள் உள்ளது. சில நேரங்களில் வன விலங்குகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருவதும் உண்டு. இந்நிலையில் கடந்த வாரம் தேயிலை தோட்டத்தில் காட்டு யானை தாக்கி பெண்  ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வால்பாறை வனச்சரகர் தலைமையில் வனத்துறையினர் விலங்குகள் குடியிருப்புகளுக்குள் புகாமல் இருக்க முழு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது வால்பாறை குடியிருப்புக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது . வனத்துறை ஊழியர் கோபி என்பவர் தனது கையை அசைத்து யானையிடம் பேசி அடர்ந்த வனப்பகுதிக்குள் யானையை விரட்டியுள்ளார். மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானை வனத்துறை ஊழியரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு அடர்ந்த வனப் பகுதிக்குள் செல்வதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்க்கின்றனர்.

Categories

Tech |