சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. பொங்கலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் அதிக அளவில் பூக்களை வாங்கி குவித்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ மூன்றாயிரம் ரூபாய், சம்மங்கி 100 ரூபாய்க்கும், பிச்சி 100 ரூபாய்க்கும் கனகாம்பரம் 100 ரூபாய்க்கும் ஜாதிமல்லி 1200 ரூபாய்க்கும், முல்லைப்பூ 1,500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பனிக்காலத்தின் காரணமாக பூ வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.