விஜய் – அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் வடிவேலுவின் கதா பாத்திரத்துடன் ஒப்பிட்டு சண்டையிட்டு வருகின்றனர்.
அஜித் மற்றும் விஜய் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கின்றனர். இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அஜித் மற்றும் விஜய் இவர்களின் படம் குறித்து ஏதாவது வெளியானதால் உடனே அதனை ட்விட்டரில் ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி விடுவார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த ஓன்று. அந்த வகையில் நேற்று விஜயின் 44- வது பிறந்த நாளுக்காக அவரது ரசிகர்கள் #happybirthdayTHALAPATHY என்ற ஹேஸ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தார்கள்.
அதே நேரத்தில் இதற்கு போட்டியாக அஜித் ரசிகர்களும் #என்றும்தலஅஜித் என்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் ஆக்கினர். விஜயின் பிறந்த நாளன்று #என்றும்தலஅஜித் என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கிய அஜித் ரசிகர்களை பழி தீர்க்கும் விதமாக இன்று #VanduMuruganAJITH என்ற ஹேஸ்டேக்கை விஜய் ரசிகர்கள் உருவாக்கினர்.
அதில் அஜித்தின் வழக்கறிஞர் கதாபாத்திரத்தை, வடிவேலுவின் வழக்கறிஞர் கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு மீம்ஸ்களை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதனால் கடுப்பாகிய அஜித் ரசிகர்கள் வடிவேலுவின் #kaipullaVIJAY என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த இரண்டு ஹேஸ்டேக்குகளும் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
விஜயும் – அஜித்தும் சினிமாவில் நெருங்கிய நண்பர்கள் ஆனால் அவரது ரசிகர்கள் போட்டி மனப்பான்மையில் இப்படி அடிக்கடி ட்விட்டரில் சண்டையிடுவது அனைவரும் அறிந்த ஓன்று தான்.