Categories
உலக செய்திகள்

’50 ஆண்டுகால நட்பு’…. வாழ்த்து தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை செயலாளர்….!!

மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் வங்கதேச பிரதமரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்க்லா இரண்டு நாள் பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார். அவர் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்து இருநாடுகளுக்கு இடையேயான 50 ஆண்டுகால நட்பிற்கு பிரதமர் மோடியின் சார்பாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் அந்நாட்டின் 50வது குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். குறிப்பாக அவரின் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் கேட்டறிந்தார்.

அதாவது பாகிஸ்தானிடம் இருந்து 1971 ஆம் ஆண்டு பிரிந்து  வங்கதேசம் தனி நாடாக உருவாகியது. இதற்கு இந்தியா பெரிதும் உதவியது. இதனை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 13 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நட்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இதற்கு முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை வங்கதேச வெளியுறவுத்துறை செயலாளரான மசூத் பின் மொமனை ஹர்ஷவர்தன் ஷ்ரிங்க்லா நேரில் சந்தித்து இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு குறித்து ஆலோசனை செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹர்ஷவர்தன் ஷ்ரிங்க்லா கூறியதில் “இந்திய-வங்கதேசம் இடையே நிலுவையில் உள்ள பிரச்சனைகளில் மிகப்பெரிய கருத்து வேறுபாடு இல்லை” என்றார்.

இதே போன்று மசூத் பின் மொமன் அளித்த பேட்டியில் கூறியதாவது ” இந்த பேச்சுவார்த்தையானது மிகவும் அக்கபூர்வமாக இருந்தது. மேலும் பிரச்சனைகளை தவிர்த்து எல்லையை எவ்வாறு அமைதியாக வைத்திருப்பது என்பது குறித்து ஆலோசனை செய்தோம்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |