Categories
உலக செய்திகள்

வங்கக்கடலில் தொடங்கும் இந்தியா-ரஷ்யா கடற்படைகள் பயிற்சி…!!!

வங்க கடலில் இந்தியா மற்றும் ரஷ்யாவின் கடற்படைகள் பயிற்சி வருகின்ற 4 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்தியா மற்றும் ரஷ்யாவின் முப்படைகள் ஒன்றாக இணைந்து கடந்த 2005ஆம் ஆண்டு முதல் பயிற்சிகளின் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா கடற்படையினர், இந்திய கடற்படை பயிற்சியில் ஈடுபட்டனர். தற்போது இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாட்டு கடற்படை களும் இணைந்து வருகின்ற 4 மற்றும் 5ஆம் தேதிகளில் வங்கக்கடலில் மிகப்பெரிய அளவிலான பயிற்சியில் ஈடுபட உள்ளன. அதிகரித்துக் கொண்டிருக்கும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும், தங்கள் படைகளின் செயல்பாட்டு தன்மையை மேலும் அதிகரிக்கக் கூடிய வகையிலும் இந்த பயிற்சியானது மேற்கொள்ளப்படுகின்றது.

இந்தப் பயிற்சிகளில் ரஷ்யாவை சேர்ந்த வினோகிராடோவ், டிரிபூட்ஸ், போரிஸ் புடோமா போன்ற கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் பிரிவுகளும் பங்கேற்க உள்ளன. அதனைப்போலவே இந்தியாவின் ரன்விஜய், ஷயாத்ரி,கில்டன், சக்தி போன்ற கப்பல்கள் மற்றும் பல்வேறு ஹெலிகாப்டர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றன. அதுமட்டுமன்றி தரை, நீர் மற்றும் வான் பகுதிகளில் இருந்து வருகின்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கூடிய வகையில் இந்தப் பயிற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. மேலும் கிழக்கு லடாக்கில் நடந்து கொண்டிருக்கும் இந்தியா மற்றும் சீனா இடையேயான மோதலில் இந்தப் போர் பயிற்சியானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

 

Categories

Tech |