Categories
கிரிக்கெட் விளையாட்டு

வங்காளதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் ….. கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில்…..விளையாட வாய்ப்பில்லை…!!!

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும்  நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான வலுவான அணியை தயாராக்க  வங்காளதேசம் கிரிக்கெட் வாரியம்  விரும்புகிறது.

வங்காளதேச அணியின் சுழல்பந்து வீச்சாளரும் ,ஆல் ரவுண்டருமான  ஷாகிப் அல் ஹசன், இலங்கைக்கு எதிராக தொடரை புறக்கணித்து, அவர் ஐபிஎல் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்தார். இதற்கு வங்காளதேச கிரிக்கெட் போர்டும் ,தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கரீபியன் பிரீமியர் லீக் போட்டி ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெறுகிறது. இதில் ஜமைக்கா தல்லாவாஸ் அணிக்காக, அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து  டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

இதன் பிறகு  இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுடன் வங்காளதேச அணி விளையாட உள்ளது. மூன்று நட்சத்திர அணிகளுக்கு எதிராக ,வங்காளதேச அணி விளையாடுவதால் ,அணியை வலுவாக்க சிறந்த வீரர்களை களமிறக்க வேண்டும் என்று வங்காளதேச அணி விரும்புகிறது. இதன் காரணமாக ஷாகிப் அல் ஹசனுக்கு கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் விளையாட தடையில்லா  சான்றிதழ் வழங்கப்படாது, என்று தெரிகிறது. இதுகுறித்து வங்காளதேச கிரிக்கெட் போர்டு  செயல்பாடு தலைவரான அக்ரம் கான் கூறும்போது, ” இதுகுறித்து எந்த ஒரு முடிவும் நாங்கள் எடுக்கவில்லை இதற்கான நேரம் வரும்போது அது குறித்து முடிவு எடுப்போம் ” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |