மதக்கோவில்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதலுக்கு அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
வங்காளதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையின மக்களாக உள்ளனர். அங்கு அண்மை காலமாகவே அவர்கள் மீது தாக்குதல்கள் அதிகமாக நடத்தப்படுகின்றன. மேலும் கடந்த 13 ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் பரவிய பொய்யான செய்தியின் காரணமாக குலாமி என்ற இடத்தில் நடந்து கொண்டிருந்த துர்கா பூஜையில் வன்முறை வெடித்தது. இதனை அடுத்து இந்துக்கள் மற்றும் அவர்களின் வீடுகள், கோவில்கள் என அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன.
இதுபோன்று வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கு அமெரிக்கா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக அமெரிக்கா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதில் “வங்காளதேசத்தில் துர்கா பூஜையின் போது இந்துக்கள் மற்றும் அவர்களின் கோயில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இது தொடர்பாக அதிகாரிகளை நாங்கள் முழுமையாக விசாரணை செய்ய வலியுறுத்தியுள்ளோம். குறிப்பாக எங்கள் எண்ணங்கள் முழுவதும் தற்பொழுது இந்து மதத்தினரிடம் உள்ளது. பொதுவாகவே மதம் அல்லது நம்பிக்கை என்பது சுதந்திரம் மற்றும் மனிதனின் உரிமை” என்று தெரிவித்துள்ளார்.