வங்காளதேசம் -நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தொடரைக் கைப்பற்றியது.
வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றனர். இரு அணிகளுகிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு எதிரான 20 ஓவர் கொண்ட முதல் போட்டியானது ,நேற்று ஹேமில்டனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களை எடுத்தது.
நியூசிலாந்து அணியில் தேவன் கான்வாய் சிறப்பாக விளையாடினார். இவர் 52 பந்துகளில் 92 ரன்களை அடுத்து விளாசினார். வில்லியங் 53 ரன்களும் , மார்ட்டின் கப்தில் 35 ரன்களும் எடுத்தனர். அடுத்து விளையாடிய வங்காளதேசம் 211 இலக்காகக் கொண்டு ஆட்டத்தில் களமிறங்கியது. ஆனால் 20 ஓவர் முடிவுகளில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை எடுத்து படுதோல்வி அடைந்தது. எனவே 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது .