Categories
கிரிக்கெட் விளையாட்டு

வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் … இலங்கையின் கேப்டனாக குசல் பெரேரா நியமனம் …!!!

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக குசல் பெரேரா மற்றும் துணை கேப்டனாக குசல் மென்டிஸ் ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளார்.

வருகின்ற 16ஆம் தேதி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்தப் போட்டியானது டாக்காவில் நடைபெற உள்ளது. எனவே இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான இலங்கை அணியின் வீரர்களில் பெயர்கள் , நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இலங்கை அணியின் கேப்டனாக இருந்த திமுத் கருணாரத்னே, விக்கெட் கீப்பரான  தினேஷ் சன்டிமால் மற்றும் ஆல்ரவுண்டர்களான மேத்யூஸ், திரிமன்னே ஆகிய வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த தொடரில் இலங்கை அணியின் புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் குசல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 101 ஒருநாள்  போட்டிகளிலும், 22 டெஸ்ட் போட்டிகளிலும் ,அதோடு 46 டி 20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அத்துடன் அணியின் துணை கேப்டனாக குசல் மென்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர்களுடன் புதுமுக  வீரர்களான வேகப்பந்து வீச்சாளர் சமிகா கருணாரத்னே மற்றும் பேட்ஸ்மேன் ஷிரன் பெர்னாண்டோ ஆகியோர்  அணியில்  இடம்பெற்றுள்ளனர் .

Categories

Tech |