Categories
கிரிக்கெட் விளையாட்டு

வங்காளதேசத்திற்கு சென்று ஐந்து டி20 போட்டிகளில் ….ஆஸ்திரேலியா அணி விளையாடுகிறது…!!!

ஆஸ்திரேலியாவுடன் மூன்று டி 20  போட்டிகளில் விளையாட இருந்த வங்காளதேச அணி, தற்போது ஐந்து  டி 20  போட்டிகளில் விளையாட உள்ளது.

ஜிம்பாப்வேயுடன், வங்காளதேச அணி  2  டெஸ்ட் போட்டி மற்றும் டி20 போட்டிகளில்  விளையாட உள்ளது. இதில் 2 டெஸ்ட் போட்டிகள் இருந்த நிலையில் தற்போது 1 டெஸ்ட் போட்டியாக  குறைக்கப்பட்டது . ஜிம்பாவேயுடன் போட்டி முடிந்த பிறகு, வங்காளதேச அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று  டி20 போட்டிகளில் இருந்த நிலையில் தற்போது 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இலங்கைக்கு எதிராக போட்டியில் வங்காளதேச அணி விளையாடுகிறது . இதன்பிறகு பிரீமியர் லீக் போட்டி நடக்கிறது.

அடுத்து ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி முடிந்த பின் , ஆஸ்திரேலியா ,நியூசிலாந்து அணிகள் வங்காளதேசத்திற்கு  சென்று   விளையாட உள்ளனர். இந்த நிலையில் வீரர்கள் பயோ-பபுள் மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றை ,மனதில் வைத்துக்கொண்டு அதிகமான போட்டிகளில் விளையாடுவது சிறந்ததல்ல. எனவே இலங்கைக்கு எதிரான தொடர் முடிந்த பின்பு போட்டி அட்டவணை தொடர்பாக  யோசிக்க உள்ளதாக, வங்காளதேச கிரிக்கெட் ஆப்ரேஷன் சேர்மனான  அக்ரம் கான் தெரிவித்து உள்ளார்.

Categories

Tech |