இரு கோரிக்கைகளை முன்வைத்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சார்பாக வாணியம்பாடி பகுதியில் சாலையில் இருக்கின்ற பேங்க் ஆப் இந்தியா வங்கி முன்பாக வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம். சுந்தரேசன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மாவட்ட அமைப்பாளர் சார்லஸ் வரவேற்றுள்ளார். பின்னர் ஆர்ப்பாட்டத்தை வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் ரவி பிரபு தொடங்கி வைத்து பேசியுள்ளார்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற கோரியும் மற்றும் வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பி உள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சாமிகண்ணு, கே.கே மணி, மஞ்சுநாத், சதீஷ் உள்பட ஏராளமானவர்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதினால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.