Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!!

2021 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதி ஆண்டில் 2 பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சஞ்சய் தாஸ் அவர்கள் ஒரு செய்தி நிறுவனத்திடம் வங்கிகளை தனியார் மயமாக்கும் யோசனையை அரசு கைவிடாவிட்டால், 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை போன்று மேலும் போராட்டங்கள் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்திற்கு வங்கி தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது. அதனால் இந்த 2 நாட்களும் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறுவதால் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். ஆனால் சனிக்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மட்டும் வங்கிகள் செயல்படாது மற்ற மாநிலங்களில் வழக்கம்போல் சனிக்கிழமை வங்கிகள் செயல்படும். ஒரு சில மாநிலங்களில் சனிக்கிழமையும் விடுமுறை என்பதால் நாளை முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மொபைல் மற்றும் இன்டர்நெட்டில் வங்கி செயல்பாடுகள் தடை இன்றி இயங்கும். மேலும் உங்களுக்கு ஏதாவது முக்கியமான வங்கி பணிகள் இருப்பின் அவற்றை முன்னதாக திட்டமிட்டு முடித்துக் கொள்ளலாம்.

விடுமுறை:

1. டிசம்பர் 16- வங்கி வேலை நிறுத்தம்

2. டிசம்பர் 17- வங்கி வேலை நிறுத்தம்

3. டிசம்பர் 18- யு சோசோ தாமின் இறந்த நாள்

4. டிசம்பர் 19- ஞாயிறு

Categories

Tech |