வங்கி ஊழியரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மெயின் சாலை பகுதியில் வாடகை வீட்டில் அருள் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அருள் பிரசாத் தனது இரு சக்கர வாகனத்தை அவரது வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு இரவு நேரத்தில் தூங்கச் சென்றுள்ளார்.
அதன்பின் காலையில் எழுந்து பார்த்த போது அவரின் இரு சக்கர வாகனம் காணாமல் போனதை கண்ட அருள் பிரசாத் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் பல பகுதிகளில் தேடியும் கிடைக்காத காரணத்தினால் அருள் பிரசாத் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.