நடிகை வனிதா தன்னை களங்கப்படுத்தி இதற்காக லட்சுமி ராமகிருஷ்ணனிடம் 2 கோடியே 50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சமீபத்தில் நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, குட்டி பத்மினி, தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் பீட்டர் பால் ஏற்கனவே திருமணமானவர் என்றும் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்தது தவறு என்றும் விமர்சித்தனர். வனிதாவிற்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் இருக்கும் இடையே இணையதள நேரலை நிகழ்ச்சி ஒன்றில் உரையாடியபோது வாடி போடி என்றும், அவதூறு வார்த்தைகள் பேசியும் மோதிக்கொண்டனர். டுவிட்டரிலும் காரசாரமாக பேசினார்.
இதையடுத்து வக்கீல் நோட்டீஸ் ஒன்றை வனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அனுப்பியுள்ளார். அதில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால் ஒரு கோடியே 25 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. இதனை வனிதா பீட்டர் பக்கத்தில் பகிர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் தனது சொந்த வாழ்க்கையில் தலையிட்டது அதுமட்டுமின்றி நஷ்ட ஈடும் கேட்டு மிரட்டுகிறார் என்றார். இந்நிலையில் தற்போது வனிதாவும் தன்னை களங்கப்படுத்தியதற்காக இரண்டு கோடியே 50 லட்சம் இழப்பீடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து இவர்களின் மோதல் மேலும் பரபரப்பாகி வருகிறது.